இந்திய எல்லையில் பாலம் அமைக்கும் சீனா…அமெரிக்கா எச்சரிக்கை

0
182

இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவத் தளபதி சார்ல்ஸ் பிளின், இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவை டெல்லியில் சந்தித்து, இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீர்குலைவை ஏற்படுத்தும் நோக்கிலும், பிற நாடுகளின் எல்லைகளை அபகரிக்கும் நோக்கிலும் சீனா செயல்பட்டு வருகிறது.

சீனாவின் இத்தகைய அணுகுமுறை அந்த நாட்டுக்கு உதவாது. சீனா தனது மேற்குப் பிராந்தியத்தில், அதாவது இந்திய எல்லையில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது இந்தியா எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம். லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டிய சீனாவின் படைக்குவிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளதாகவும், சீனாவின் உள்நோக்கம் என்ன என்பது குறித்து அந்த நாட்டிடம் இருந்து தான் பதில் பெற வேண்டும் என்றும் சார்ல்ஸ் பிளின் தெரிவித்தார்.

Previous articleநாசாவின் ராக்கெட் ஏவுதலை ஆஸ்திரேலியா நடத்தும் – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
Next articleசித்து மூசேவாலா கொலை :சதி திட்டம் தீட்டியது லாரன்ஸ் பிஷ்னோய்