News4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

-

நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களாக பிரியா – முருகப்பன் (பிலோலா குடும்பம்) குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின்மத்திய நகரான பிலோலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்களான கோபிகா (6), மற்றும் தர்ணிகா(4) ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பிலோலாவை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற குறித்த குடும்பத்தினர், அங்கு தங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டதுடன், மெல்போர்னிலிருந்து கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் அவர்கள் பிலோலாவுக்குத் திரும்புவதற்கு வழி வகுத்துள்ளது.

இந்த குடும்பம் வீடு திரும்புவதில் தாம் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு பிரதமர் என்டனி அல்பானீஸ் தெரிவித்தார்.

மார்ச் 2018 இல் பிலோலாவிலிருந்து இக்குடும்பம் அழைத்துச் செல்லப்பட்டு, குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டது.

அவர்களைத் மீண்டும் பிலோலாவுக்கு அழைத்துவருவதற்காக உள்ளூர் மக்கள்1,500 நாட்களுக்கும் மேலாக பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.

குடும்பத்திற்கு ஆதரவாக ஹோம் டு பிலோ பிரசாரகர் ஏஞ்சலா ஃபிரடெரிக்கின் Change.org மனுவில் கிட்டத்தட்ட 600,000 பேர் கையெழுத்திட்டனர்.

மேலும் 53,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், 2019 இல், இக்குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் கூட்டு முயற்சியை நீதிமன்றங்கள் தடுத்தன.

2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அவர்களை பெர்த்தில் உள்ள சமூக காவலுக்கு மாற்றும் வரை, அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இடைக்கால உள்விவகார அமைச்சர், ஜிம் சால்மர்ஸ், இடம்பெயர்தல் சட்டத்தின் 195A பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தை மீண்டும் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தார்.

Latest news

பண்டிகைக் காலத்தில் நிரம்பி வழிந்த குப்பை தொட்டிகள் – குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் முடிவடைந்ததால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல நகராட்சி மன்றங்கள் தங்கள் உள்ளூர் அரசாங்கங்களின் குடியிருப்பாளர்களுக்கு கூடுதல் குப்பைத்...

விற்பனைக்கு வந்துள்ள பிரைட்டன் அரண்மனை

126 ஆண்டுகள் பழமையான Brighton Palace Pier எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற கட்டமைப்பை அதன் தற்போதைய உரிமையாளரான...

உக்ரைன் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆஸ்திரேலியர்

உக்ரைனில் சண்டையின் போது இறந்த ஆஸ்திரேலிய நாட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஸ்ஸல் ஆலன் வில்சன் "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற...

பெரும்பாலான வேலைகளை காப்பாற்றிய Cheap as Chips ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனைச் சங்கிலியான Cheap as Chips-இன் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Cheap as Chips சங்கிலி...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக உஸ்மான் கவாஜா அறிவிப்பு

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2025 ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது...

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...