Newsஇலங்கைக்கு உதவுகள் - உலக மக்களிடம் கோரிக்கை வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்...

இலங்கைக்கு உதவுகள் – உலக மக்களிடம் கோரிக்கை வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்!

-

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிதி திரட்டும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு உலகெங்கிலும் உள்ள தமது ரசிகர்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 47.2 மில்லியன் டொலர்களை திரட்டுவது இதன் இலக்காகும்.
இந்த நிதி இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பதிவொன்றை வெளியிட்டு அவுஸ்திரேலியா வீரர்கள் இருவரும் குறித்த நிதி திரட்டும் பிரச்சாரத்தில் இணைந்தனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...