Newsஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 91 பேருக்கு நேர்ந்த கதி!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 91 பேருக்கு நேர்ந்த கதி!

-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்றதாக 91 பேரை இருவேறு நடவடிக்கைகளின் மூலம் நேற்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் மாரவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் முதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் சிலாபம் கடல் பகுதியில் மீன்பிடி படகிலிருந்த 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் என 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள் அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நிலையில் கடற்படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிற்றூர்தியொன்றையும் மகிழுந்து ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்கரையில் நேற்று பிற்பகல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை கட்டளைப்பிரிவின் குழுவினர் சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன்போது, 58 ஆண்கள், 5 பெண்கள், 6 குழந்தைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் என ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், பல நாள் மீன்பிடிக் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாரவிலவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிலாபம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகவும் மிகவும் ஆபத்தான வகையிலும் நாட்டிலிருந்து வெளியேற்ற முயலும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது உயிர்களையும் உடமைகளையும் பணயம் வைப்பதைத் தவிர்க்குமாறும் கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

மேலும், இதற்காக பயன்படுத்தப்படும் படகுகள் காலாவதியான மீன்பிடி படகுகள் எனவும், அவற்றின் ஊடாக சட்டவிரோதமாக குடிபெயர முற்படுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...