Newsஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 91 பேருக்கு நேர்ந்த கதி!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 91 பேருக்கு நேர்ந்த கதி!

-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்றதாக 91 பேரை இருவேறு நடவடிக்கைகளின் மூலம் நேற்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் மாரவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் முதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் சிலாபம் கடல் பகுதியில் மீன்பிடி படகிலிருந்த 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் என 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள் அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நிலையில் கடற்படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிற்றூர்தியொன்றையும் மகிழுந்து ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்கரையில் நேற்று பிற்பகல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை கட்டளைப்பிரிவின் குழுவினர் சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன்போது, 58 ஆண்கள், 5 பெண்கள், 6 குழந்தைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் என ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், பல நாள் மீன்பிடிக் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாரவிலவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிலாபம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகவும் மிகவும் ஆபத்தான வகையிலும் நாட்டிலிருந்து வெளியேற்ற முயலும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது உயிர்களையும் உடமைகளையும் பணயம் வைப்பதைத் தவிர்க்குமாறும் கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

மேலும், இதற்காக பயன்படுத்தப்படும் படகுகள் காலாவதியான மீன்பிடி படகுகள் எனவும், அவற்றின் ஊடாக சட்டவிரோதமாக குடிபெயர முற்படுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

Latest news

One Nation-இல் சேர Branaby Joyce-இற்கு அழைப்பு!

முன்னாள் துணைப் பிரதமர் Branaby Joyce-ஐ One Nation-இல் சேர Pauline Hanson அழைப்பு விடுத்துள்ளார். Branaby சமீபத்தில் தேசியக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். தனக்கும்...

Bluesky-உடன் இணையும் வெள்ளை மாளிகை

எலோன் மஸ்க்கின் "X" சமூக ஊடக தளத்திற்கு போட்டியாளரான Bluesky-உடன் வெள்ளை மாளிகை இணைந்துள்ளது. அதன் முதல் பதிவாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து பல்வேறு மீம்ஸ்கள்,...

டிரம்பை சந்திக்க செல்கிறார் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாளை வெள்ளை மாளிகைக்கு சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உலக ஊடகங்களில் பெரும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் காணொளி குறித்து கிரிக்கெட் உலகில் சில விவாதங்கள் நடந்தன. இந்த சர்ச்சைக்குரிய காணொளி, கைகுலுக்காததற்காக இந்தியாவை கேலி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இது ஆசிய...