Article பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா...யார் இவர் ?

பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா…யார் இவர் ?

-

பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் ஸ்ரீதர் சேனா பங்கேற்று, பிரிஸ்பேன் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து படைக்க உள்ளார். யார் இந்த ஸ்ரீதர் சேனா என்பதை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கள் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை வென்றவர் தான் இந்த ஸ்ரீதர் சேனா. முன்னதாக சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளரான ஸ்ரீதர் சேனாவிற்கு தனது கைகளாலேயே வெற்றி கோப்பையை வழங்கினார் இசையமைப்பாளர் அனிருத்.

ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஸ்ரீதர் சேனாவை, தான் இசையமைத்து, கதாநாயகனாக நடித்த அன்பறிவு என்ற படத்தில் பாடகராக அறிமுகம் செய்து வைத்தார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இருந்தாலும் ஸ்ரீதர் சேனா விரைவில் அனிருத்தின் இசையில் ஒரு பாடல் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.