Newsஅனைவருக்கும் நன்றி - ஆஸ்திரேலியர்களின் கோரிக்கையில் விடுதலையான பிரியா - நடேசன்...

அனைவருக்கும் நன்றி – ஆஸ்திரேலியர்களின் கோரிக்கையில் விடுதலையான பிரியா – நடேசன் குடும்பம்

-

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக கடந்த நான்கு வருடங்களாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பமொன்று பெரும் போராட்டத்தின் பின்னர் இன்று அவர்கள் வாழ விரும்பிய இடத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்து, திருமணம் செய்துகொண்ட நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர், குவீன்ஸ்லாந்து Biloela பிரதேசத்தில் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த நிலையில் – 2018 ஆம் ஆண்டு – அகதிக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, குடிவரவு அமைச்சின் தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். சட்ட ரீதியாக மேற்கொண்ட மேன் முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்தனர்.

அவர்களது தடுப்புக்கு எதிராக, அவர்கள் வசித்த குவீன்ஸ்லாந்து Biloela பிரதேச மக்கள் உடனடியாகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். “அமைதியான குடும்பமொன்றின் வாழ்வையும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசு சீரழிக்கிறது” – என்று ஊடகங்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பிடமும் செய்திகளைக்கொண்டு சேர்த்தனர். நடேசலிங்கம் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு சுமார் ஆறு லட்சம் ஆஸ்திரேலியர்கள் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு சுமார் ஐயாயிரத்து 300 தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக நடேசலிங்கம் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேசிய அளவில் இந்தக்குடும்பத்தின் பிரச்சினை விழிப்புணர்வானது. நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு நாட்களை எண்ணிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அரசின் முயற்சியை இயன்றளவு சட்ட ரீதியாக முறியடிப்பதற்கு, ஆஸ்திரேலியாவின் பல பொது அமைப்புக்கள் உதவ முன்வந்தன.

எல்லாவற்றையும் மீறி 2019 ஆம் ஆண்டு, நடேசலிங்கம் குடும்பத்தினர் சிறிலங்காவுக்கு விமானம் ஏற்றி அனுப்பப்பட்டனர். ஆனால, அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த, கடைசி நேர வழக்கின் மீது நீதிபதி வழங்கிய தீர்ப்பின் பேரில், டார்வினில் விமானம் தரித்தபோது, அதிலிருந்து இறக்கப்பட்ட நடேசலிங்கம் குடும்பத்தினர் மீண்டும் தடுப்புமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அகதிகள் நல அமைப்பினர், நடேசலிங்கம் குடும்பத்தினர் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்கள் அனைத்தினதும் முன்னிலையில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது விடுதலையைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

இந்தக் காலப்பகுதியில், குவீன்ஸ்லாந்துக்குச் சென்றிருந்த அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் இப்போதைய பிரதமருமான அன்ரனி அல்பனீஸி, லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தக் குடும்பத்தினை நிச்சயம் தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்து, குவீன்ஸ்லாந்து பிரதேசத்தில் வாழ அனுமதி வழங்குவேன் என்று உறுதியளித்தார்.

அந்த உறுதிமொழியின் பிரகாரம், நடேசலிங்கம் குடும்பத்தினரை குவீன்லாந்து பிரதேசத்தில் வசிப்பதற்கு, அரசு அனுமதியளிப்பதாக லேபர் அரசின் குடிவரவு அமைச்சர் கடந்த வாரம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நடேசலிங்கம் குடும்பத்தினர் பேர்த்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று குவீன்ஸ்லாந்துக்கு கொண்டுவரப்பட்டனர்.

Latest news

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

ANZ வாடிக்கையாளர்களுக்கு வெளியான துயரமான செய்தி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் 0.10%...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain...

மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் கணவர்களுக்கு ஒரு நற்செய்தி

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு புதிய AI ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. Woody என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிட்னியின் Silverdale Shopping Centre-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. BellBots-ன் நிறுவனர்...

மெல்பேர்ண் கடற்கரையில் பிரித்தானிய பயணிக்கு நேர்ந்த சோகம்

மெல்பேர்ண் கடற்கரையில் நீர்சறுக்கு விளையாடிய பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெல்பேர்ண் கடற்கரையில் பலத்த காற்றுக்கு மத்தியில் 43 வயது பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் நீர் சறுக்கு(surfing) விளையாடிய...

வானிலை வலைத்தளத்திற்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் புதிய வலைத்தளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால் புதிய வலைத்தளம் பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. புதிய தளம் பரந்த பொதுமக்களுக்கு "தெளிவான மற்றும்...