Newsஅனைவருக்கும் நன்றி - ஆஸ்திரேலியர்களின் கோரிக்கையில் விடுதலையான பிரியா - நடேசன்...

அனைவருக்கும் நன்றி – ஆஸ்திரேலியர்களின் கோரிக்கையில் விடுதலையான பிரியா – நடேசன் குடும்பம்

-

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக கடந்த நான்கு வருடங்களாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பமொன்று பெரும் போராட்டத்தின் பின்னர் இன்று அவர்கள் வாழ விரும்பிய இடத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்து, திருமணம் செய்துகொண்ட நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர், குவீன்ஸ்லாந்து Biloela பிரதேசத்தில் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த நிலையில் – 2018 ஆம் ஆண்டு – அகதிக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, குடிவரவு அமைச்சின் தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். சட்ட ரீதியாக மேற்கொண்ட மேன் முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்தனர்.

அவர்களது தடுப்புக்கு எதிராக, அவர்கள் வசித்த குவீன்ஸ்லாந்து Biloela பிரதேச மக்கள் உடனடியாகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். “அமைதியான குடும்பமொன்றின் வாழ்வையும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசு சீரழிக்கிறது” – என்று ஊடகங்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பிடமும் செய்திகளைக்கொண்டு சேர்த்தனர். நடேசலிங்கம் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு சுமார் ஆறு லட்சம் ஆஸ்திரேலியர்கள் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு சுமார் ஐயாயிரத்து 300 தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக நடேசலிங்கம் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேசிய அளவில் இந்தக்குடும்பத்தின் பிரச்சினை விழிப்புணர்வானது. நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு நாட்களை எண்ணிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அரசின் முயற்சியை இயன்றளவு சட்ட ரீதியாக முறியடிப்பதற்கு, ஆஸ்திரேலியாவின் பல பொது அமைப்புக்கள் உதவ முன்வந்தன.

எல்லாவற்றையும் மீறி 2019 ஆம் ஆண்டு, நடேசலிங்கம் குடும்பத்தினர் சிறிலங்காவுக்கு விமானம் ஏற்றி அனுப்பப்பட்டனர். ஆனால, அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த, கடைசி நேர வழக்கின் மீது நீதிபதி வழங்கிய தீர்ப்பின் பேரில், டார்வினில் விமானம் தரித்தபோது, அதிலிருந்து இறக்கப்பட்ட நடேசலிங்கம் குடும்பத்தினர் மீண்டும் தடுப்புமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அகதிகள் நல அமைப்பினர், நடேசலிங்கம் குடும்பத்தினர் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்கள் அனைத்தினதும் முன்னிலையில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது விடுதலையைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

இந்தக் காலப்பகுதியில், குவீன்ஸ்லாந்துக்குச் சென்றிருந்த அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் இப்போதைய பிரதமருமான அன்ரனி அல்பனீஸி, லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தக் குடும்பத்தினை நிச்சயம் தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்து, குவீன்ஸ்லாந்து பிரதேசத்தில் வாழ அனுமதி வழங்குவேன் என்று உறுதியளித்தார்.

அந்த உறுதிமொழியின் பிரகாரம், நடேசலிங்கம் குடும்பத்தினரை குவீன்லாந்து பிரதேசத்தில் வசிப்பதற்கு, அரசு அனுமதியளிப்பதாக லேபர் அரசின் குடிவரவு அமைச்சர் கடந்த வாரம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நடேசலிங்கம் குடும்பத்தினர் பேர்த்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று குவீன்ஸ்லாந்துக்கு கொண்டுவரப்பட்டனர்.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...