Newsநீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

-

பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு ஆஸ்திரேலியா இழப்பீடு வழங்கவிருக்கிறது.

இருநாட்டிற்கும் இடையே கசப்படைந்துள்ள உறவைச் சரிசெய்ய அது உதவும் என்று கான்பெரா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) இன்று (11 ஜூன்) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இழப்பீடு குறித்து அறிவித்தார்.

பிரெஞ்சு ராணுவக் கப்பல் குழுமமான Naval Group-க்குச் சுமார் 583 மில்லியன் டொலர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட பல பில்லியன் டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைச் சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா ரத்துசெய்தது.

அதற்குப் பதில் அது அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் AUKUS எனும் தற்காப்புப் பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டது.

அந்த உடன்பாட்டின்கீழ் மூன்று நாடுகளும் கப்பல்களை இணைந்து தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பிரான்சின் பங்களிப்பை அதிகம் மதிப்பதாய்ப் பிரதமர் அல்பனீசி தெரிவித்தார்.

விரைவில் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) அழைப்பையேற்று பாரிஸ் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...