மிஸ் மார்வல் வெப்தொடரில் ரஜினியின் பாடல்.. தீயாய் பரவும் வீடியோ

0
280

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ மற்றும் டாக்டர் ஸ்ட்ரெஞ்சு மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்களை தொடர்ந்து மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் வெப்தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. இயக்குனர் பிஷா.கே அலி இயக்கத்தில் வெளியாகியுள்ள மிஸ் மார்வெல் வெப்தொடரில் இமான் வெல்லானி மிஸ் மார்வெல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாட் லின்ட்ஸ், யஸ்மீன் ஃப்ளட்சர், ஷெனோபியா சோர்ஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வாரம் ஒரு எப்பிசோடாக வெளியாகவுள்ள இந்த வெப்தொடரின் முதல் எபிசோட் இன்று (ஜூன் 8) வெளியானது. இதில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘ஓ நண்பா’ பாடல் ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Previous articleஐ.நா. பொதுசபையில் இந்தி உள்ளிட்ட மொழிகளின் பயன்பாடு – இந்தியா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்
Next articleபிரனவம் நடன ஒடிஸி