பிரெஞ்சுக் கடற்படைக் குழுமத்துடன் பெரிய இழப்பீட்டுத் திட்டத்தை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற பிரான்ஸுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைகூடவில்லை.
நியாயமான முறையில் அந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள, பிரெஞ்சு நிறுவனம் 584 மில்லியன் டாலர் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதாகப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறினார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசனின் அரசாங்கம் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைக் கைவிட்டது.
அதற்குப் பதிலாக அமெரிக்க, பிரிட்டிஷ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறைந்தது 8 அணுவாயுதச் சக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படும் என்று திரு. மோரிசன் அறிவித்திருந்தார்.