சர்வதேச அளவில் தயாராகப் போகும் சூர்யாவின் 2 படங்கள்

0
206

சர்வதேச அளவில் சூர்யாவின் 2 படங்கள் தயாராக உள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விக்ரம் படத்தில் இடம் பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சூர்யா இடம்பெற்றிருந்தாலும், ரோலக்ஸ் கேரக்டர் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் கமல் மீது கொண்ட அன்புக்காக சூர்யா நடித்திருந்தார். இதனை கமல் உறுதி செய்திருந்த நிலையில், அவருக்காக ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை அவர் பரிசளித்திருந்தார். இதன்பின்னர் சூர்யாவுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வைத்திருந்த ‘இரும்புக் கை மாயாவி’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்சன் ஜேனரில் சூர்யாவின் படம் ஒன்று உருவாகவுள்ளது.

இவ்விரு படங்களும் சர்வதேச தரத்தில் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக சினிமா ரசிகர்களை ஈர்க்கும் வகையில் படத்தில் கதையம்சம் இருக்கும் என்று கோலிவுட்டில் தற்போது பேசப்படுகிறது. சூர்யா தற்போது பாலா இயக்கி வரும் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முக்கிய காட்சிகள் அனைத்தும் கன்னியாகுமரியில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனை முடித்துக் கொண்டு வெற்றி மாறன் இயக்கவுள் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைகிறார். அத்துடன் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதன்பின்னர் இரும்புக் கை மாயாவி அல்லது, ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பெரிய படங்களில் சூர்யா இடம்பெற்றிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Previous articleரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கருவியா…அமிதாப் பச்சன் நிகழ்ச்சியால் பதற்றம்
Next articleஉத்தரப்பிரதேச வன்முறை: கைதானவரின் வீடு இடிப்பு