பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்களை வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்தது ஏன்?

0
214

வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாமிய அரசர்கள் குறித்து மட்டுமே அதிகம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த அமித் ஷா, பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் போன்ற பேரசர்கள் குறித்து பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்,

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற, எழுத்தாளர் ஓமேந்திர ரத்னுவின் ‘மஹாராணா: சஹஸ்த்ர வர்ஷா கா தர்ம யுத்தம் [மஹாராணாக்கள்: தர்மத்திற்கான ஆயிரம் வருடப் போர்] புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். .புத்தகத்தை வெளியிட்டு பேசிய அமித் ஷா, ​​“வரலாற்றை அரசாங்கங்களால் உருவாக்க முடியாது, அது உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்று நாம் உண்மை என்று நம்பும் வரலாற்றுக்கு பின்னால் பல உண்மை வரலாறுகள் மறைந்திருக்கும். அதை வரலாற்றாசிரியர்கள் மீட்டெடுக்க வேண்டும் ” என்றார்.

இன்று நாம் படிக்கும் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்கள் முகலாய ஆட்சியை பற்றி மட்டுமே விவாதித்துள்ளனர். அவர்களைத் தாண்டி பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் அஸ்ஸாமை ஆண்டது. அஹோம்கள் பக்தியார் கல்ஜி, ஔரங்கசீப்பை தோற்கடித்து அசாம் இறையாண்மையை தக்க வைத்துள்ளனர். பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தது. சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மௌரியர்கள் முழு நாட்டையும் – ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை – 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சத்வாகனர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மற்றும் (குப்த பேரரசர்) சமுத்திரகுப்தர் முதல் முறையாக ஒரு ஐக்கிய இந்தியாவைக் கற்பனை செய்தார். ஆனால் அவற்றைப் பற்றிய குறிப்புப் புத்தகம் இல்லை,” என்றார்.

வரலாறுகள் எல்லாம் வெற்றி தோல்வியை வைத்து நிர்ணயிக்கப்படுவது இல்லை. அந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தை வைத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது. இன்று நாம் உண்மை என்று நம்பும் பலவும் உண்மையான சம்பவங்கள், வரலாறுகள் வெளிவரும்போது மறைந்துவிடும் என்றார். நாம் வாழ்வது சுதந்திர நாடு. உண்மையை எழுத யாருக்கும் தடை இல்லை. யாரும் நம்மை தடுக்க மாட்டார்கள். அதனால் வரலாற்றாசிரியர்கள் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

Previous articleபெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது
Next articleகேலி செய்த இளைஞரை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த கோர சம்பவம்