News இந்தியாவுடன் - சீனாவுடன் கூட்டணி அமைக்கும் ரஷ்யா - புட்டின் வெளியிட்ட...

இந்தியாவுடன் – சீனாவுடன் கூட்டணி அமைக்கும் ரஷ்யா – புட்டின் வெளியிட்ட தகவல்

-

இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷியா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீா் புட்டின் தெரிவித்தாா்.

ரஷிய தலைநகா் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோா்களுடன் அவா் வியாழக்கிழமை உரையாடினாா். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷியாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது. அப்போது விளாடிமீா் புட்டின் கூறியதாவது:

இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷியா நல்ல உறவைப் பேணி வருவது குறித்து இங்கு பேசப்பட்டது. ஆனால், அந்த இரு நாடுகள் பற்றி மட்டும் பேசி, லத்தீன் அமெரிக்காவை மறந்துவிடக்கூடாது; தற்போது பின்தங்கியிருந்தாலும் முன்னேற்றத்தை எதிா்நோக்கியிருக்கியிருக்கும் ஆப்பிரிக்காவையும் கருத்தில் கொள் வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் 150 கோடி மக்கள் வசிக்கிறாா்கள். இந்தப் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோ்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா, சீனா மட்டுமன்றி இந்த நாடுகளுடனும் நல்லுறவைப் பேணும் வாய்ப்பு ரஷியாவுக்குக் கிடைத்துள்ளது. (உக்ரைன் விவகாரத்தில்) பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷியாவைச் சுற்றி வேலி அமைத்து பிற நாடுகளிடமிருந்து பிரிக்க மேற்கத்திய நாடுகளால் முடியாது. ஐரோப்பிய நாடுகளே ரஷியாவின் எண்ணெய்யை இன்னும் சில ஆண்டுகளுக்கு முழுமையாக புறக்கணிக்க முடியாது என்றாா் அவா்.

Latest news

ஜெட்ஸ்டார் விமானத்தில் குடிபோதையில் பயணித்த நபர் – $31,300 அபராதம்

ஜெட்ஸ்டார் விமானத்தில் குடிபோதையில் நடந்து கொண்ட பயணிக்கு $31,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பெர்த்தில் இருந்து சிட்னிக்கு...

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளை கட்டுப்படுத்த NSW முடிவு

சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் முடிவு செய்துள்ளது.

மெல்போர்னின் வடக்கே பல பகுதிகளில் லேசான நடுக்கம்

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்...

வாக்கெடுப்பில் “YES” முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது

சுதேசி ஹடா வாக்கெடுப்பில், YES முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது. நியூஸ்போல் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில்,...

வடக்கு மாகாண முதலமைச்சரை தாக்கியதாக பெண் மீது குற்றம்

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் தாக்கப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 56 வயதுடைய...