Newsஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை - வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு?

-

ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறையால் வர்த்தகங்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.

போதிய ஊழியர்கள் இல்லாததால் திட்டமிட்டபடி அவற்றால் சேவை வழங்க முடியவில்லை. குறைந்த நேரத்துக்கு மட்டுமே வர்த்தகம் செய்ய முடிவதால் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியவில்லை.

இதனால் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரான ஆண்டனி அல்பனிசிக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

2017ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிலும் அதிகபட்சம் 160,000 வெளிநாட்டு ஊழியர்களை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வேலையில் அமர்த்தலாம்.

ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடியது. இதன் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களின் வரவு தடைபட்டது.

தற்போது படிப்படியாக வழக்கநிலை திரும்புவதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

Latest news

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட Qantas விமானம்

தெற்கு ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற Qantas விமானம் நேற்று இரவு பாதுகாப்புப் படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக அடிலெய்டு விமான நிலையத்தில் தரையிறங்குவதை...

விக்டோரியா காட்டுத்தீயால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரும் சேதம்

விக்டோரியா முழுவதும் பரவியுள்ள காட்டுத்தீயால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதம் 20 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று விக்டோரியன் விவசாயிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஊதா நிற தக்காளி

ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, மரபணு மாற்றப்பட்ட ஊதா நிற "Purple Bliss" தக்காளி சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலிய பழக் கடைகளுக்கு வந்து சேரும். இது ஆஸ்திரேலியாவில்...

BBQ அடுப்பு வெடிப்பு – இரு குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் உள்ள Conjola ஏரியில் உள்ள Big4 holiday park-இல் ஏற்பட்ட BBQ வெடிப்பில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....