முடிவுக்கு வந்தது பிரான்ஸ் உடனான நீர்மூழ்கி கப்பல் விவகாரம்…ஆஸ்திரேலியா எடுத்த அசத்தல் முடிவு

0
340

4300 கோடி டாலர் மதிப்பில் 12 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக கடந்த 2016 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு பிறகு நடந்த பல குழப்பங்களால் இந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது. இதனால் பிரான்ஸ் உடனான ஆஸ்திரேலியாவின் நல்லுறவு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவு நாடுகளுடனான விரிசல் உறவுகளை சரிசெய்ய ஆஸ்திரேலிய பிரதர் அந்தோனி அல்பானீஸ் முன் வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக கான்பெரா மற்றும் பாரிஸ் இடையே உறவுகளை மோசமாக்கிய பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பாளரான நேவல் குரூப்புடன் இழப்பீட்டு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இது ஒப்பந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இது பற்றி பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஆஸ்திரேலியாவின் 555 மில்லியன் யூரோக்கள் (584 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) “நியாயமான மற்றும் சமமான தீர்வுக்கு” பிரெஞ்சு நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

Previous articleஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடிய தருணிகா
Next articleபெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது