Newsஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - நிலைமையைச் சமாளிப்பதில் சிக்கல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – நிலைமையைச் சமாளிப்பதில் சிக்கல்

-

ஆஸ்திரேலியா பாரிய எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குளிர்காலம் நெருங்கும் வேளையில் கிழக்குக் கரையோர வட்டாரத்தில் எரிசக்தித் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிரிஸ் போவன் (Chris Bowen) நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும் தேவையை நிறைவுசெய்வதில் சிரமம் ஏற்படும் என்று ஆஸ்திரேலிய எரிசக்தி ஆணையம் கூறுகிறது.

நாட்டில் குறைந்துவரும் வெப்பநிலையால் எரிசக்திக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரியைக் கொண்டு இயங்கும் சில எரிசக்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகவே நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது.

நேற்று வேறுவழியின்றி ஆஸ்திரேலிய எரிசக்தி ஆணையம் அவசரநிலை அதிகாரத்தைப் பிறப்பிக்கவேண்டியிருந்தது.

அதன்வழி இன்னும் கூடுதலான எரிசக்தியைக் கட்டமைப்புக்குள் செலுத்த மின்சார நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

Latest news

11 ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்களின் உரிமங்கள் ரத்து

கடந்த 9 மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்கள் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இடம்பெயர்வு முகவர்கள் பதிவு ஆணையத்தால் (OMARA) 5 ஆண்டுகளுக்கு...

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலிய Skilled விசாவில் ஏற்படும் மாற்றம்

ஜூலை 1 ஆம் திகதி முதல் திறன் விசா வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச வருமான தள்ளுபடியை 4.6 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர வாராந்திர ஊதிய...

மெல்பேர்ண் பள்ளி குழந்தைகள் மத்தியில் பரவும் ஆபாசமான புகைப்படம்

மெல்பேர்ண் தனியார் பள்ளியில் சிறுவர்களிடையே குழந்தை துஷ்பிரயோக புகைப்படங்கள் பரிமாறப்பட்டது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களிடையே ஒரு...

மகனின் மரணத்தை பயன்படுத்தி 1 மில்லியன் டாலர் மோசடி செய்த சிட்னி தந்தை

பொதுமக்களிடமிருந்து $1 மில்லியன் மோசடி செய்வதற்காக தனது மகனின் மரணத்தைப் பயன்படுத்திக் கொண்டதாக சிட்னியைச் சேர்ந்த ஒரு தந்தை மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின்...