News ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - நிலைமையைச் சமாளிப்பதில் சிக்கல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – நிலைமையைச் சமாளிப்பதில் சிக்கல்

-

ஆஸ்திரேலியா பாரிய எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குளிர்காலம் நெருங்கும் வேளையில் கிழக்குக் கரையோர வட்டாரத்தில் எரிசக்தித் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிரிஸ் போவன் (Chris Bowen) நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும் தேவையை நிறைவுசெய்வதில் சிரமம் ஏற்படும் என்று ஆஸ்திரேலிய எரிசக்தி ஆணையம் கூறுகிறது.

நாட்டில் குறைந்துவரும் வெப்பநிலையால் எரிசக்திக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரியைக் கொண்டு இயங்கும் சில எரிசக்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகவே நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது.

நேற்று வேறுவழியின்றி ஆஸ்திரேலிய எரிசக்தி ஆணையம் அவசரநிலை அதிகாரத்தைப் பிறப்பிக்கவேண்டியிருந்தது.

அதன்வழி இன்னும் கூடுதலான எரிசக்தியைக் கட்டமைப்புக்குள் செலுத்த மின்சார நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.