Newsஉக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் - ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

உக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் – ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

-

உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் ஜெர்மனி சான்ஸ்லர் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், ஜெர்மனி சான்ஸ்லர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் எதிர்வரும் 16ஆம் திகதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 ஐரோப்பிய தலைவர்களும் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி போரை தொடங்கிய ரஷ்யா தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்தது.

ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ரஷிய படைகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதை தொடர்ந்து ரஷியா தனது கவனத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் மீது திருப்பியது. முந்தைய தவறான செயல்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் துல்லியமான தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறான சூழலில் இந்த தலைவர்கள் உக்ரைன் செல்ல திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...