News பிரியா - நடேசன் குடும்பத்தை சந்தித்த ஆஸ்திரேலிய பிரதமர் - விரைவில்...

பிரியா – நடேசன் குடும்பத்தை சந்தித்த ஆஸ்திரேலிய பிரதமர் – விரைவில் நிரந்தர வதிவிடம்

-

ஆஸ்திரேலிய தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார்.

குயின்ஸ்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார்.

நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார்.

தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மகிழ்ச்சியான நாட்கள் வரவுள்ளன என்பதை அறிந்து இன்று நாங்கள் உண்மையாகவே நம்பிக்கையுடன் காணப்படுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருடன் உரையாட எங்களிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாத நிலையில் காணப்பட்டோம், ஆனால் பிரியாவும் நடேஸலிங்கமும்ம் தங்கள் நன்றியை தெரிவிப்பது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரை அவர்கள் கட்டித்தழுவுவதை பார்ப்பது மிகவும் உணர்ச்சிவசப்படவைத்தது தீர்வு வந்துகொண்டிருக்கின்றது என பிரதமர் உறுதியளித்தார் எனவும் அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.