Newsஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் தீவிர முயற்சியில் இலங்கையர்கள் - விடுக்கப்பட்டு அவசர எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் தீவிர முயற்சியில் இலங்கையர்கள் – விடுக்கப்பட்டு அவசர எச்சரிக்கை

-

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும் படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், சிறிய படகுகள் மூலம் கரையில் இருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகிற்கு இடப்பெயர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கு 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த தினம் ஆஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து படகுகள் மூலம் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, கடத்தல் காரர்களே அவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...