News700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி -...

700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி – ஜெர்மனி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், டூபிங்கன் பல்கலைக்கழகம் இணைந்து நேச்சர் இதழில் வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆய்வு தொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், “பிளாக் டெத் தொற்றுநோயை முதன்முதலில் பரப்பிய பாக்டீரியா மத்திய ஆசியாவின் நவீன கிர்கிஸ்தானில் உள்ள மூன்று கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் 1346 முதல் 1353 வரை புபோனிக் பிளேக் நோய் உலகின் பெரும் பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது. சில இடங்களில் 60 சதவிகித மக்கள் இந்த நோயால் இறந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பான ஆய்வில், ஸ்டிர்லிங் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் பிலிப் ஸ்லாவின், இசிக் குல் ஏரிக்கு அருகிலுள்ள சூ பள்ளத்தாக்கில் 1338, 1339-ம் ஆண்டுகளில் மூன்று கல்லறைகளைக் கண்டுபிடித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த மூன்று கல்லறைகளில் நெஸ்டோரியன் கிறிஸ்தவ சமூகத்தில் புதைக்கப்பட்ட மூன்று பெண்களின் பற்களிலிருந்து, யெர்சினியா பெஸ்டிஸ் பிளேக் பாக்டீரியாவின் முதல் டி.என்.ஏ தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்திருக்கின்றனர்.

அந்த டி.என்.ஏ-வை ஆய்வுசெய்தபோது, நோய்க் கிருமியின் மரபணு தன்னை மறுகட்டமைத்து அது பிளாக் டெத் எனும் தொற்றை ஏற்படுத்தியதையும், இன்று இருக்கும் பெரும்பாலான பிளேக் நோய்களுக்கும் அந்த நோய்க்கிருமியின் மரபணுதான் வழிவகுத்தது என்பதையும் கண்டுபிடித்திருக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர், மற்றும் முதன்மை எழுத்தாளரான மரியா ஸ்பைரோ, ‘புபோனிக் பிளேக் மத்திய தரைக்கடல் முழுவதும் பழைய சில்க் ரோடு வர்த்தகப் பாதை வழியாகப் பரவியது. அதற்கு முன்பு 500 ஆண்டுகள் வரை நீடித்த கொடிய நோய்களின் அலையால், இது `இரண்டாவது பிளேக் தொற்றுநோய்’ என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஐரோப்பாவில் பிளேக் பரவுவதற்கு வர்த்தகம் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது என்பது ஆய்வில் தெரியவந்தது.

Latest news

ஆஸ்திரேலியாவின் இளைய விமானி

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளான். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Byron Waller என்ற இளைஞர்,...

ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வரும் விக்டோரியாவின் கடன் சுமை

2024-25 நிதியாண்டில் விக்டோரியா அரசாங்கத்தின் நிகரக் கடன் ஒரு மணி நேரத்திற்கு $2 மில்லியன் அதிகரித்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. அதன்படி, ஒரு வருடத்தில் கடன்...

இன்று ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு

உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரெய்ன்...

Melbourne West Gate Freeway-இல் தீ விபத்து – நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல்

மெல்பேர்ண் விரைவுச்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட லாரி தீ விபத்து, பயணிகளுக்கு பெரும் தாமதத்தை ஏற்படுத்தியது. Port Melbourne-இல் உள்ள புறநகர்ப் பாதையான West Gate Freeway-இல்...

Melbourne West Gate Freeway-இல் தீ விபத்து – நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல்

மெல்பேர்ண் விரைவுச்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட லாரி தீ விபத்து, பயணிகளுக்கு பெரும் தாமதத்தை ஏற்படுத்தியது. Port Melbourne-இல் உள்ள புறநகர்ப் பாதையான West Gate Freeway-இல்...

எச்சரிக்கை..! உணவுப் பொருளில் கண்ணாடித் துண்டுகள்

ஜாடிகளில் கண்ணாடித் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, Coles, Woolworths மற்றும் IGA பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பிரபலமான ஊறுகாய் Jalapenos-இற்கு அவசரகால திரும்பப் பெறுதல் உத்தரவு...