Breaking Newsஇலங்கைக்கு 50 மில்லியன் டொலர் உதவிகளை வழங்கும் ஆஸ்திரேலியா!

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் உதவிகளை வழங்கும் ஆஸ்திரேலியா!

-

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் மருந்து, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவு வருகின்றது.

இலங்கையில் உள்ள மூன்று மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு 22 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா 2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கவுள்ளது.

இந்த நன்கொடை இலங்கையில் உள்ள ஐ.நா. முகவர் நிலையங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...