ஜெயிலர் படத்திற்காக ரஜினிகாந்த்திற்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா ?

0
266

ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாத்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் நடிக்குமாறு ஐஷ்வர்யாராயை படக்குழுவினர் அணுகியுள்ளனர். இருப்பினும் அவர் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக ரஜினிகாந்த் தனது 169 வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும், இதற்காக தனது சம்பளத்தை பாதியாக குறைத்து 50 கோடி ரூபாய் மட்டுமே வாங்குவதாகவும் முன்னதாக தகவல் பரவியது. இந்நிலையில் ஜெயிலர் படத்திக்க நடிகர் ரஜினிகாந்த் 151 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

Previous articleஇலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா
Next articleஇலங்கையில் அதிபர் அலுவலகம் முற்றுகை: போராட்டக்காரர்கள் 21 பேர் கைது