இலங்கையில் அதிபர் அலுவலகம் முற்றுகை: போராட்டக்காரர்கள் 21 பேர் கைது

0
141

70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை தடுமாறி வருகிறது. இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வலியுறுத்தி, கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் நேற்று 73-வது நாளை எட்டியது. இந்தச் சூழலில், அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து நுழைவுவாயில்களையும் போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் இரவு அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஒரு புத்த துறவி, 4 பெண்கள் உள்ளிட்ட 21 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அதிபர் அலுவலக செயலகத்தின் நுழைவுவாயில்கள் வழியாகத்தான் நிதி அமைச்சகத்துக்கும், அரசு கருவூலத்துக்கும் செல்ல முடியும். நிதி அமைச்சகத்துக்கு சர்வதேச நாணய நிதிய குழு வருகை தரும் நிலையில், 2 நுழைவுவாயில்களை திறந்து வைத்திருக்கும் வகையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இல்கையில் பெட்ரோல் பங்கில் நின்றிருந்தவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு சர்வதேச அரசுகள் பலவும் தங்களின் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றன.