சிட்னியில் 3டி பாதசாரி கடவைகளை சோதனை செய்யத் தொடங்கியுள்ளன.
இதனால் போக்குவரத்தின் வேகத்தை குறைக்க முடியும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
3டி நடைபாதைகள் ஏற்கனவே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சோதனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் சிட்னி மேன்லி நியூ சவுத் வேல்ஸில் இதை முயற்சிக்கும் முதல் பகுதியாகும்.
ஆஸ்திரேலியாவில் முப்பரிமாண நடைபாதைகளை சோதனை செய்த முதல் நகரம் குயின்ஸ்லாந்தில் உள்ள பவுலியா ஆகும்.
இது கெய்ர்ன்ஸ் மற்றும் மெல்போர்னில் பல இடங்களில் சோதனை செய்யப்படுகிறது.