Sportsஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 30 வருடங்களின் பின்னர் இலங்கை அணி சாதனை!

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 30 வருடங்களின் பின்னர் இலங்கை அணி சாதனை!

-

ஆஸ்திரேலியா அணியுடனான 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

5 போட்டிகளை கொண்ட தொடரின் 4 ஆவது போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

30 வருடங்களில் பின்னர் இலங்கை மண்ணில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...

விபத்துக்குள்ளான குயின்ஸ்லாந்து பயணக் கப்பல்

குயின்ஸ்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பயணக் கப்பல் பப்புவா நியூ கினியாவின் கடற்பரப்பில் ஒரு பாறையில் மோதியதை அடுத்து, 12 நாள் சொகுசு பயணப் பயணம்...

ஆஸ்திரேலியாவின் இறைச்சித் தொழிலுக்கு சிவப்பு விளக்கு

சீனா மாட்டிறைச்சி இறக்குமதிக்கு புதிய ஒதுக்கீடுகள் மற்றும் வரிகளை விதித்து வருவதால், ஆஸ்திரேலிய இறைச்சித் தொழில் $1 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தகத்தை இழக்க நேரிடும் என்ற...

ஆஸ்திரேலியாவின் இறைச்சித் தொழிலுக்கு சிவப்பு விளக்கு

சீனா மாட்டிறைச்சி இறக்குமதிக்கு புதிய ஒதுக்கீடுகள் மற்றும் வரிகளை விதித்து வருவதால், ஆஸ்திரேலிய இறைச்சித் தொழில் $1 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தகத்தை இழக்க நேரிடும் என்ற...

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...