Newsபாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பேச்சுவர்த்தை

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பேச்சுவர்த்தை

-

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று புதுடெல்லியில் இருநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவர்த்தை நடத்தினர்.

கொரோனா பெருந்தொற்று சவால்களுக்கிடையே இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது குறித்தும் மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு பணிக்குழுவை நிறைவேற்றுவதற்கு இருதரப்பும் உறுதி பூண்டனர்.

கடந்த மாதம் இரு நாட்டு பிரதமர்கள் இடையே நடைபெற்ற காணொலி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட “ஜெனரல் ராவத் இளைய அதிகாரிகள் பரிமாற்று திட்டத்தை” தொடங்குவதற்கு இரு நாட்டு அமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

Latest news

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...

மெல்பேர்ண் Gymகளில் இருந்து திருடப்படும் கார்கள்

மெல்பேர்ணில் உள்ள பல உடற்பயிற்சி கூடங்களிலிருந்து கார் சாவியைத் திருடி வாகனங்களைக் கடத்த முயன்ற இரண்டு இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர்கள் திருடப்பட்ட Anytime...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...