News பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பேச்சுவர்த்தை

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பேச்சுவர்த்தை

-

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று புதுடெல்லியில் இருநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவர்த்தை நடத்தினர்.

கொரோனா பெருந்தொற்று சவால்களுக்கிடையே இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது குறித்தும் மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு பணிக்குழுவை நிறைவேற்றுவதற்கு இருதரப்பும் உறுதி பூண்டனர்.

கடந்த மாதம் இரு நாட்டு பிரதமர்கள் இடையே நடைபெற்ற காணொலி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட “ஜெனரல் ராவத் இளைய அதிகாரிகள் பரிமாற்று திட்டத்தை” தொடங்குவதற்கு இரு நாட்டு அமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...