புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா – குவியும் வாழ்த்துகள்

0
212

சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ராஷ்மிகா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தெலுங்கில் புட்ட பொம்மா பாடலுக்கு நனைமாடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்ட புஷ்பா படத்தில் நடித்து இந்திய ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். இந்த படம் இந்திய அளவில் ரூ.350 கோடிகளை வசூல் செய்தது.

நடிகை ராஷ்மிகா மந்தனா புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். நடிகைகள் பலரும் சொந்தத் தொழிலிலும் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா, ப்ளம் என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இத்தகவலை அவரே ட்விட்டரில் வெளியிட்டதையடுத்து, ராஷ்மிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Previous articleபொருளாதாரம் சரிந்துவிட்டது…எண்ணெய் வாங்க நிதி இல்லை – இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹே
Next articleபாடகியாக முயற்சிக்கும் ஆஸ்திரேலிய தமிழ் பெண்…யார் இவர்?