திருக்குறள் புத்தகத்தின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

0
348

கனடா நாட்டின் Scatborough மற்றும் Rouge park மகாணங்களின் எம்பி,யாக விஜய் தணிகாச்சலம் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா பாராளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்ட இவர் திருக்குறளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டு பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

பெரிய திருக்குறள் புத்தகத்தின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட விஜய் தணிக்காச்சலம் தனது பதவியேற்பு உரையில், Scatborough மற்றும் Rouge park மாகாணங்களின் பிரதிநிதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். குயின்ஸ் பூங்காவில் உங்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என உறுதி அளித்தார்.

திருக்குறளை பயன்படுத்தி இரண்டாவது முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன். திருக்குறள் என்பது சங் காலத்தை சேர்ந்த ஒரு உன்னதமான தமிழ் இலக்கியமாகும். இது 1330 குறள்களை உடையது. இது திருவள்ளுவரால் எழுதப்பட்ட மதசார்பற்ற நெறிமுறைகள் குறித்து எழுதப்பபட்ட மிக முக்கியமான இலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கிபி 450 முதல் 500 க்கு முந்தையது என அவர் குறிப்பிட்டார்.

Previous articleபாதுகாப்பு வேண்டி ஆஸ்திரேலியா வந்தவர் பாதுகாப்பு நிறுவனம் நடத்தும் வெற்றி பயண கதை
Next articleபொருளாதாரம் சரிந்துவிட்டது…எண்ணெய் வாங்க நிதி இல்லை – இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹே