
ஆஸ்திரேலிய வாழ் தமிழ் பெண்ணான கேசிகா அமிர், சினிமாவில் பாடகியாக பெரும் முயற்சி செய்து வருகிறார். முறையாக கர்நாடக இசை பயின்றவரான கேசிகா, நல்ல குரல் வளமும் இசை ஞானமும் கொண்டவர் ஆவார். இவர் ஆஸ்திரேலியாவில் பல மேடை கச்சேரிகளில் பாடி புகழடைந்துள்ளார்.

யூட்யூப் சேனல்கள் பலரும் இவரது பாடல் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றன. இவரது இனிமையான குரல் வளத்திற்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் சினிமா பாடல்களை தனது இனிமையான குரலில் பாடி கைதட்டல்களையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். சினிமாவில் மிகப் பெரிய பாடகியாக ஆக வேண்டும் என்பது தான் கேசிகாவின் வாழ்நாள் லட்சியமாகவும், கனவாகவும் உள்ளது. தனது கனவை நினைவாக்க தீவிரமாக அவர் முயற்சி செய்து வருகிறார்.

Winner: 2014 Junior category
Winner: 2015 Duet category
Winner 2017: Youth category