Newsஆஸ்திரேலியா வரும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

ஆஸ்திரேலியா வரும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

-

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வரும் ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வருகையைத் தடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார்.

அதற்காக தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் நடைமுறையில் வைத்திருப்பது அவசியமானது என அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைத் தஞ்சக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் எல்லைக் கொள்கை மாறவில்லை என தொழிற்கட்சி அரசாங்கம் உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.

“தற்காலிக பாதுகாப்பு விசாக்களுக்கு முடிவுக் கட்டுவோம் எனத் தொழிற்கட்சி தெளிவாக தெரிவித்துள்ளதால் எதுவும் மாறவில்லை எனத் தொழிற்கட்சியால் சொல்ல முடியாது,” என ஆஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் விமர்சித்திருக்கிறார்.

தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் என்பது எல்லைகள் இறைமை நடவடிக்கையின் (Operation Sovereign Borders) முக்கியமான அங்கம் என கரேன் ஆண்டூருஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்ட கடுமையான விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான சிறப்பு விதிகளை...

சிங்கப்பூர் மற்றும் பாலி தீவுகளுடன் இணைக்கத் தயாராக உள்ள Karratha விமான நிலையம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karratha பிராந்திய விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பில்பாரா பகுதியில் உள்ள மக்கள் சிங்கப்பூர் மற்றும் பாலி...

விக்டோரியா கடற்கரையில் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான திமிங்கல புதைபடிவம் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Ocean Grove கடற்கரையில் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிகவும் அரிதான திமிங்கல புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மணல் அகற்றப்பட்டபோது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப்...

விக்டோரியா கடற்கரையில் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான திமிங்கல புதைபடிவம் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Ocean Grove கடற்கரையில் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிகவும் அரிதான திமிங்கல புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மணல் அகற்றப்பட்டபோது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப்...

கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று நோய் அபாயம்

மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தட்டம்மை அபாயம் குறித்து சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பெர்த்தில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு தட்டம்மை நோய்...