News இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

-

இலங்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த வாரம் கிராமிய பகுதிகளில் பாடசாலைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளை வழமைபோன்று முன்னெடுக்க வேண்டும்.

குறித்த பாடசாலைகளில், போக்குவரத்து பிரச்சினை உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் ஊடாக, அந்த ஆசிரியர்களின் பிரத்தியேக விடுமுறையில் விடுவித்து, பொறுத்தமான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும்.

அதேநேரம், கடந்த வாரம் பாடசாலைகள் இயங்காத நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை 3 நாட்களுக்கு இயக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் குறித்த பாடசாலைகள் இயங்க வேண்டும்.

அந்தப் பாடசாலைகளில், ஆரம்பப் பிரிவு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்கும் நாட்கள் குறித்து, தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வராத நாட்களில் இணையவழி முறைமையில், வீட்டுப் பாடங்களை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் ஊடாக கற்பித்தல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக, பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்காக, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.