ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களை எவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பது என்று தெரியாமல் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தவிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் சளிக் காய்ச்சலால் கடந்த மாதம் 65,770 பேர் பாதிப்படைந்தனர். இந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.