Newsதேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

-

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ‘Varroa Mite’ ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் ‘Varroa Mite’ ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது.

அதையடுத்து கடுமையான உயிரியல் பாதுகாப்புப் பகுதி ஒன்றை அதிகாரிகள் உருவாக்கினர். அதன்படி, அந்த 50-கிலோமீட்டர் பகுதிக்குள் உள்ள தேனீக்கள், தேன்கூடுகள் ஆகியவற்றை நகர்த்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

‘Varroa Mite’ ஒட்டுண்ணி தேனீக்களை அழித்து நாட்டின் தேன் உற்பத்தியைப் பாதிக்கக்கூடும். அதனால் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்று ஆஸ்திரேலியத் தேனீத் தொழில்துறை மன்றம் தெரிவித்துள்ளது.

ஒட்டுண்ணியை முழுமையாக ஒழிப்பதற்காக அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநில முதன்மைத் தொழில்துறைகளின் பிரிவும் கூறியுள்ளது. தேன் உற்பத்தி தவிர, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் தேனீக்கள் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...

கடந்த சில நாட்களாக விக்டோரியா சாலையில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி...

உலகின் முதல் டிரில்லியனர் பற்றிய புதிய வெளிப்பாடு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் குறித்த சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரது...