News ஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

-

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்கு 12 மில்லியன் டொலர் சொத்தை தனது மகளுக்கு எழுதி வைத்துள்ளார்.

சொத்து முழுவதும் மகளுக்குதான். ஆனால், அதை அடையும் முன் தன் மகள் ஒரு நிரந்தர வேலையில் சேரவேண்டும் என்று கூறி இறந்து விட்டார். பார்க்க மிக எளிதான வேலை போல இது தோன்றினாலும் அவர் மகளுக்கு இது மிக கடினமானது.

ஏனெனில் அவர் மகளுக்கு ADHD என்ற கவனக்குறைவு மற்றும் ’ஹைப்பர் ஹேக்டிவிட்டி’ பிரச்சனை இருக்கிறது. இந்த குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேலையை கவனமாக செய்ய முடியாது. இதன் காரணமாக நிரந்தர வேலை இவர்களுக்கு கிடைப்பது அரிது. இதனால் கோடிஸ்வரரின் மகள் பல இடங்களில் அலைந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தந்தையின் இந்த முடிவை எதிர்த்து அவரது மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வேலைக்காக அனைத்து முயற்சியும் எடுத்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் தனது தந்தை இறப்பதற்கு முன்பு வரை வாரம் பணம் கொடுத்ததாகவும், அதையும் அவர் பல நேரங்களில் சரியாக தராமல் ஏமாற்றி தன்னை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு நீதிமன்றம் தனக்கு உரிய நீதியை பெற்றுத்தரும் என்றும் கூறியுள்ளார்.

கிளாரா என்று பெயர் கொண்ட அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய உயர் ஊதிய வளர்ச்சி

ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதம் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஊதிய வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

குரங்கு அம்மை அச்சம் – குரங்குகளை கொல்லும் மக்கள்

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட...

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் இலங்கை வருகை – சனத் ஜயசூரியவுடன் சந்திப்பு

இந்திய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அந்நாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காகநேற்று மாலை இலங்கை வந்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் திறக்கும் ஜனாதிபதி ரணில்!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆஸ்திரேலியாவில் உயர் விருது வென்ற இலங்கை மாணவி – பரிசு தொகையில் உதவி செய்ய திட்டம்

ஆஸ்திரேலியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இலங்கை மாணவி அதி உயர் விருதை பெற்றுள்ளார்.

சீன அதிகாரிகளின் செயலால் அலறியடித்து ஓடிய மக்கள்

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பிரலாபமான ஐகியா ஷோரூமில் கொரோனா கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க மக்கள் அலறியடித்து ஓடும் வீடியோ இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு...