ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு

0
266

2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர்.

இதில் நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான தகுதிப்பட்டியலில் 276 திரைப்படங்களில் சூர்யா நடித்த `ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்து போட்டியிட்டது. இதேபோல இந்தி நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

Previous articleஇலங்கையர்களின் ஆஸ்திரேலிய பயணத்தை இன்றும் தடுத்து நிறுத்திய கடற்படையினர்!
Next articleஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்… தலைமறைவான ஊழியர்