”கொரோனா இன்னும் அழிவில்லை… பாதிப்பு அதிகரிக்குது” – WHO எச்சரிக்கை

0
278

கொரோனா பெருந்தொற்று மாற்றம் கண்டிருப்பதாகவும் ஆனால் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 110 நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கூறியுள்ள டெட்ரோஸ் அதானம், இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா அலைகளைத் தடுக்க மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துமாறு உலக நாடுகளை வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டில் உலகம் முழுவதும் ஆயிரத்து 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

Previous articleரசிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை.. அமெரிக்க பாப் பாடகருக்கு 30 ஆண்டு சிறை
Next article10th Year anniversary