News ஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள்...

ஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள் இன்று!

-

ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை , கட்டுரை , நாடகம் என பல்துறைசார் பங்களிப்பை வழங்கிய இவர் , இலங்கை தமிழ் நாடகத்துறை வரலாற்றில் பெரும் தடம் பதித்தவர். மொரட்டுவ பொறியியல் பீடத்தில் படித்த போது , ‘நுட்பம்’ எனும் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் இதழுக்கு உருக்கொடுத்தவர்களில் ஒருவர்.

ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் கலையாக்க பணியைக் குறைத்து, தமிழ் ஊட்டலுக்காய் பாரதி பள்ளி அமைத்து மூன்று தசாப்தங்களாய் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருப்பவர். ஒரு நாடகக் கலைஞனாய், பல சிறுவர் நாடகங்களை உருவாக்கி மேடையேற்றிக் கொண்டிருப்பவர்.

தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இங்கிருக்கும் தமிழ்ப் பணியோடு , தாயகத்தில் ‘தற்கொலை தடுப்பு’, இயற்கை முறைப் பயிர்ச் செய்கை’ என பல செயற்திட்டங்களை சமூகத்துக்கு நன்மைபயக்கும் வகையில் முனைப்புடன் முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்.

அர்ப்பணிப்பின் அர்த்தமாய் – பல்துறைசார் ஆளுமையாய் – இங்கு தமிழ் பேசும் தலைமுறைகளின் உருவாக்கத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராய் விளங்கும் இவர் , இன்னும் பல ஆண்டுகள் நலமாய் வாழ்ந்து தன் பணி தொடரவேண்டும்.

Latest news

11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பண விகிதம் 4% ஐத் தாண்டியது

11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் 04 சதவீதத்தை தாண்டியுள்ளது.

விக்டோரியாவில் ஆரம்பநிலைக்கு கார் பதிவு இலவசம்

விக்டோரியா மாகாணத்தில் தொழிற்பயிற்சி படிக்கும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் கார்களை இலவசமாக பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாரிசன் காலத்தில் பல சுகாதாரத் திட்டங்களில் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது

ஸ்காட் மொரிசனின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் மற்றும் வைத்தியசாலைத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

37 ஆண்டு சாதனையை முறியடித்த பெர்த் மழை

37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு நாளில் பெர்த்தில் பெய்த கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.