அரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

0
269

ஆந்திர அரசியலில் நுழையவோ, சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவோ தனக்கு எண்ணமில்லை எனவும் ஆந்திர அரசியலில் நுழைவதாக பரவும் செய்தி தவறானது எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் ஆந்திர அரசியலில் நுழைகிறார் என்றும், அவர் YSR காங்கிரஸ் சார்பில், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப் போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் நடிகர் விஷால் கவனத்திற்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பாக கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால், அரசியல் நுழைவு பற்றி பரவி வரும் தகவலை மறுத்துள்ளார். அத்துடன் ஆந்திர அரசியலில் தான் நுழையப் போவதாக வரும் செய்திகள் தவறு. ஆந்திர அரசியலில் நுழைவதோ, சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவோ தனக்கு எண்ணம் இல்லை. அது குறித்து பரவும் செய்திகள் தவறானவை எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதுபற்றி தன்னிடம் யாரும் பேசவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு சினிமா மட்டுமே என்றும் ஆந்திரா அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை எனவும் கூறியுள்ளார். நடிகர் விஷால் ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய வேட்பு மனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇது என்னுடைய கதையல்ல; புலம் பெயர்ந்தவர்களின் கதை…ஆஸ்திரேலிய அமைச்சர் பென்னி வோங்
Next articleகேரளாவில் ஆந்தராக்ஸ் நோய் பரவல் அபாயம்