ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் 480,000 பணி வெற்றிடங்கள் உள்ளதென புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 58,000 வெற்றிடங்கள் அதிகமாகும்.
2020 ஆண்டு பெப்ரவரி புள்ளிவிவர பகுப்பாய்வுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மே மாதத்தில் வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் தொடக்கத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு வெற்றிடமாக இருப்பதாகக் கூறிய வணிகங்களின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது என புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.
கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பலர் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சில பணியிடங்கள் திருப்திகரமாக நிரப்பப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மாநில வாரியாக, விக்டோரியாவில் அதிகபட்சமாக 18 சதவீத வெற்றிடங்கள் உள்ளன.
ஆஸ்திரேலியா முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான வேலை வெற்றிடங்கள் சில்லறை வர்த்தகத் துறையிலேயே (38 சதவீதம்) உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.