Newsஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேரின் பரிதாப நிலை!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேரின் பரிதாப நிலை!

-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன.

இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது படகொன்றுடன் குறித்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானாவர்களில் கடத்தல்காரர்கள் 6 பேர் உட்பட 41 ஆண்களும், 5 பெண்களும் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 முதல் 56 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...