Newsஇலங்கைக்கு ஆஸ்திரேலியா செய்யும் மிகப்பெரிய உதவி!

இலங்கைக்கு ஆஸ்திரேலியா செய்யும் மிகப்பெரிய உதவி!

-

இலங்கைக்கு ஆஸ்திரேலியா மிகப்பெரிய உதவிகளை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் டேவிட் ஹோலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினை குறித்து ஆஸ்திரேலியா நன்கு அறிந்துள்ளதா‌க அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நாடொன்று இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளில் அதிகூடிய தொகையை அந்நாட்டினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில் ஏனைய துறைகளுக்கும் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Latest news

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...