Newsஇலங்கைக்கு ஆஸ்திரேலியா செய்யும் மிகப்பெரிய உதவி!

இலங்கைக்கு ஆஸ்திரேலியா செய்யும் மிகப்பெரிய உதவி!

-

இலங்கைக்கு ஆஸ்திரேலியா மிகப்பெரிய உதவிகளை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் டேவிட் ஹோலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினை குறித்து ஆஸ்திரேலியா நன்கு அறிந்துள்ளதா‌க அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நாடொன்று இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளில் அதிகூடிய தொகையை அந்நாட்டினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில் ஏனைய துறைகளுக்கும் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Latest news

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...

எலோன் மஸ்க்கின் நல்லறிவு குறித்து பிரதமரின் அறிக்கை

சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து காட்சிகளை அகற்ற எலோன் மஸ்க் மறுத்துவிட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இ-பாதுகாப்பு ஆணையர் கோரியபடி ட்விட்டர் அகற்றாததால் தொடர்புடைய...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒருவகை நோயின் தாக்கம்

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் தொற்றுநோய்க்கான பருவம் மீண்டும் வரவிருக்கிறது, மேலும் சில பகுதிகளில் காய்ச்சல்...