ஆஸ்திரேலிய மாணவர் வீசா பெற்றுக் கொண்ட சுமார் 115,000 பேர் இன்னும் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, தற்போது 469,306 ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் 354,475 பேர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளனர் மற்றும் 114,831 பேர் இன்னும் இந்த நாட்டிற்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் எல்லைகள் திறக்கப்பட்டதற்கும் மே மாத இறுதிக்கும் இடையே தாக்கல் செய்யப்பட்ட மொத்த விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது.
அவர்களில் ஏறக்குறைய 1.22 மில்லியன் பேருக்கு ஏற்கனவே விசா வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் 22 வரைஆம் திகதி வரைஆஸ்திரேலியாவுக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான மாணவர் விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்களாகும். அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் இருந்து வந்துள்ளனர்.