அசத்தலான பொன்னியின் செல்வன் போஸ்டர்கள்…ஜுலை 8 ல் டீசர் வெளியீடு

0
326

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் போஸ்டர், ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி போஸ்டர் மற்றும் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்தி போஸ்டர் ஆகியவை வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான நந்தினி கேரக்டரின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள இந்த கேரக்டர் அவருக்கு மிகப் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் ஏற்படும் கற்பனையை அப்படியே மணிரத்னம் திரையில் கொண்டு வருவார் என்று இந்த போஸ்டர்களில் மூலம் தெரிய வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். படத்தின் டீசர் ஜுலை 8 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleமியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை.. நண்பர்களை பார்க்க சென்றபோது துயரம்
Next articleஇளையராஜாவுக்கு எம்பி பதவி – பிரதமர் மோடி அறிவிப்பு