Newsஎரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை கட்டிய விவசாயி!

எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை கட்டிய விவசாயி!

-

எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை இளம் விவசாயி ஒருவர் கட்டிய சம்பவம் ஒன்று தம்புள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக ‘லங்காதீப’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தம்புள்ளையில் உள்ள அதுபாறை பிரதேசத்தில் வசிக்கும் இளம் விவசாயியும் பால் பண்ணையாளருமான ஆர்.எம்.ரத்நாயக்க 50 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார்.

தம்புள்ளை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்கு காத்திருந்தோர் வரிசையில் தனது தேவைகளுக்கும் மாடுகளின் தேவைகளுக்குமாக கறவை மாட்டின் பின்புறத்தில் தனது மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை எழுதி விட்டுள்ளார்.

பெற்றோலினை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்களாக வரிசையில் நின்றதாகவும், ஆனால் பெற்றோலினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை தொடர்பாக பிரதேச செயலாளர், காவல்துறையினர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு அவர் அறிவித்துள்ளதாக லங்காதீப இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மறைந்து போகும் சனி கிரகத்தின் வளையம்

சனியின் சின்னமான வளையங்கள் மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சனியின் மேற்பரப்பில் வளையங்களாகத் தோன்றும் தூசித் துகள்கள்...

ஜெசிந்தாவைப் புகழ்ந்து பேசிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் நாட்டைப் பாதுகாக்கும் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார். நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

விக்டோரியா பெரும் செல்வத்தை ஈட்டுகிறது – பிரதமர் அல்பானீஸ்

விக்டோரியாவை ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார். வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

தனிமையில் வாடும் இளைஞர்களைப் பற்றி மெல்பேர்ணில் இருந்து வெளியாகிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாக மெல்பேர்ண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவில் 15 முதல் 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் முதலிடத்தில் இருப்பதாகக்...