Newsஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா - வெளியான பரபரப்பு தகவல்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா – வெளியான பரபரப்பு தகவல்

-

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டு விட்டார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளை சனிக்கிழமை (09.07.2022) நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் இலக்கு அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு, அரச தலைவர் மாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை நடத்துவதே என்று உளவுத்துறை உறுதிப்படுத்தியதனையடுத்து, பாதுகாப்பு உத்தியாக அரச தலைவர் மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது கொழும்பை பாதுகாப்பதற்காக வரலாற்றில் மிகப்பெரிய காவல்துறை படை குவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,000-க்கும் அதிகமான இராணுவத்தினரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் குழுக்களை எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளன.

சட்டத்தரணிகள் சங்கமும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் காவல்துறையின் தலையீடு இருக்காது என்று காவல்துறை மா அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதனை தடுக்குமாறு கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

IPL 2025 தொடர் மே 17 தொடங்கும் – BCCI அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட IPL தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று BCCI நேற்று (மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறும்...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...