கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் அனைத்துத்தரப்பினரும் இன்று சனிக்கிழமை பாரிய எழுச்சிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் அனைவரும் அரச தலைவர் மாளிகையினை முற்றுகையிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்லவில் உள்ள இராணுவ முகாமில் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்களத்தில் வெளிவரும் Youtube வலையமைப்பு இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் வர்த்தக நகரான கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பத்தரமுல்ல அமைந்து உள்ளது. இது மத்திய பகுதியான புறக்கோட்டையில் இருந்து 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.